மே 1 ஆம் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு முன்னணி தொலைக்காட்சிகள் புத்தம் புதிய திரைப்படங்களை ஒளிபரப்பின. அதில் முக்கியமான திரைப்படங்கள் வலிமை மற்றும் மாநாடு திரைப்படங்கள். சன் தொலைக்காட்சி ஏற்கனவே ஒளிபரப்பு செய்யப்பட்ட பழைய படங்களையே ஒளிபரப்பு செய்வதாக அறிவித்திருந்தது. அதனால் ஜீ தொலைக்காட்சியில் வலிமை 6.30 மணிக்கு ஒளிபரப்பு என்றதும் எதிர்பார்ப்பு எகிறியது. விஜய் தொலைக்காட்சி 'மாநாடு' ஒளிபரப்ப போகிறது என்றதும் சன் டிவி 'டாக்டர்' படத்தினை போட்டியாக ஒளிபரப்பியது.
அது போக, கலைஞர் தொலைக்காட்சி சார்ப்பட்ட பரம்பரை படத்தை ஒளிபரப்பியது. எந்ததெந்த திரைப்படங்கள் நல்ல ரேட்டிங் பெற்றன என காண்போம்.
வலிமை
வலிமை திரைப்படத்திற்கு போட்டியாக சன் தொலைக்காட்சி 'மாஸ்டர்' திரைப்படத்தை ஒளிபரப்பு செய்தது. ஏற்கனவே வலிமை கலவையான விமர்சனங்களை பெற்றதால் சுமாரான ரேட்டிங்ஸ் மட்டுமே கிடைத்துள்ளது. ஆனாலும் ஜீ தமிழ் தொலைக்காட்சி பொறுத்தவரை நல்ல ரேட்டிங் ஆகும். ஜீ தொலைக்காட்சி பொறுத்தவரை 2.0 திரைப்படம் (10.79 TVR) இதற்க்கு முன்பு அதிக ரேட்டிங் பெற்றுள்ளது. வலிமை ரேட்டிங் ஜீ தமிழ் திரைப்படங்கள் ரேட்டிங்கில் 5 வை இடம் பெற்றுள்ளது.
வலிமை 5.68 TVR பாயிண்ட்களை பெற்றுள்ளது.சென்னை போன்ற பெரு நகரங்களில் 7.17 tvr பாய்ண்டுகள் பெற்றுள்ளது.வலிமைக்கு போட்டியாக களமிறங்கிய மாஸ்டர் திரைப்படம் (3 வைத்து ஒளிபரப்பு )7.49 TVR பெற்று மே 1 அன்று அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படங்களில் முதலிடம் வகிக்கிறது .
மாநாடு
மாநாடு
விஜய் தொலைக்காட்சியில் காலையில் ஒளிபரப்பப்பட்டது மாநாடு திரைப்படம். மாநாடு திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று நல்ல வசூலை பெற்றாலும் சின்னத்திரை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற வில்லை .காலை வேளை ஓளிபரப்பாகி ய மாநாடு திரைப்படம் வெறும் 3.75 TVR மட்டுமே பெற்றது .
மாநாடு படத்திற்கு போட்டியாக சன் டிவி, டாக்டர் படத்தினை ஒளிபரப்பி தற்போது வெற்றி கண்டிருக்கின்றனர். டாக்டர் திரைப்படம் 6.3 TVR பெற்று காலை வேளை அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படம் ஆகியிருக்கின்றது.




Comments
Post a Comment