விருதுகளை குவித்த "சுந்தரி" நெடுந்தொடர்

            சன் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் நடிகர், நடிகைகளை கௌரவிக்கும் விதமாக ஆண்டு தோறும் 'சன் குடும்பம் விருதுகள்' என்னும் விருது வழங்கும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது சன் தொலைக்காட்சி. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் சுந்தரி தொடருக்கு ரசிகர் பட்டாளம் அதிகம். நிஜமான குடும்பங்கள் கொண்டாடும் சின்னத்திரை தொடர் என்றால் அது சுந்தரி தொடர் தான். இளைஞர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு இத்தொடருக்கு உண்டு. அதற்கு சமீப காலமாக சுந்தரி பெற்று வரும் TRP ரேட்டிங்ஸ்-யை சான்று. ஆம், சுந்தரி தொடர் பல மாதங்கள் ஆக டாப் 2 வில் இடம் பெற்று வருகிறது. முதல் இரண்டு இடத்தில் கயல் மற்றும் சுந்தரி தொடர்கள் உள்ளன.

        சமீபத்தில் நடந்து ஒளிபரப்பாகிய நிகழ்ச்சியில் சுந்தரி நெடும் தொடர் 13 விருதுகளை அள்ளியது.எந்தெந்த விருதுகளை சுந்தரி தொடர் வென்றது என காணலாம் 

சிறந்த நெடுந்தொடர் ( Favorite Serial ):
இந்த விருதானது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட விருது ஆகும்.விருது நடைபெறும் பல வாரங்களுக்கு முன்பாகவே ஒவ்வொரு தொடருக்கும் missed call எண் அறிமுகப்படுத்தபட்டு வாக்கெடுப்பு நடத்தினர் தொலைக்காட்சி நிர்வாகம்.இத்தொடருடன் ரோஜா, கயல், அபியும் நானும், கண்ணான கண்ணே போன்ற தொடர்களும் நாமினேட் செய்யப்பட்டிருந்தன.இதில் மிகப்பெரும் வாக்கு வித்தியாசத்தில் சுந்தரி தொடர் வென்றது. இரண்டாவது இடத்தை கயல் தொடர் பிடித்ததாக தொலைக்காட்சி நண்பர் ஒருவர் தெரிவித்தார்.ஆக,சுந்தரி தொடர் சிறந்த தொடராக மக்களால் தேர்தெடுக்கபட்டது.


sundari serial

சிறந்த நடிகை ( Favourite Actress ):
மிகவும் போட்டியுள்ள இந்த பிரிவில் கேப்ரியல்லா உடன், ப்ரியங்கா (ரோஜா), சைத்ரா (கயல்), நிமேஷிகா (கண்ணான கண்ணே), ப்ரீத்தி சர்மா (சித்தி 2) ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர். இந்த பிரிவில் கேப்ரியல்லா, சைத்ரா, பிரியங்கா, ப்ரீத்தி நல்ல வாக்குகளை பெற்றனர். சன் குடும்பம் விருதில் அதிக வாக்குகள் பெறப்பட்ட பிரிவு இது ஆகும். நோமின்டே ஆன அனைவரும் நல்ல வாக்குகளை பெற்றனர். முதல் இடத்தை பெற்ற கேப்ரியல்லா வெற்றி பெற்றார்.


sun kudumbam awards winners list

sundari serial

சிறந்த பண்முக நடிகர் :

    சுந்தரி தொடர் நாயகன் ஜிஷ்ணுக்கு இந்த விருது ஜூரிகளால் தேர்தெடுக்கப்பட்டு அளிக்கப்பட்டது. இவர் கடந்த வருடம் நடைபெற்ற விழாவில் சிறந்த குணச்சித்திர நடிகர் விருதை "கண்மணி" தொடருக்காக பெற்றார்.  
sundari serial



சிறந்த இயக்குனர் ( Best Director ):
இயக்குனர் அழகர் , இதற்க்கு முன் "சரவணன் மீனாட்சி" தொடரை இயக்கியவர்.பின்பு இவர் நடித்த பாசமலர், திருமணம் தொடர்கள் 'ஹிட் ' அடித்தது.இப்போது சுந்தரி தொடருக்காக சிறந்த இயக்குனர் விருதை பெறுகிறார். இதே, விருதை செல்வம் அவர்களும் கயல் தொடருக்காக பெற பட்டார். பொதுவாக TRP -யில் நம்பர் 1 இடத்தை பெரும் தொடரின் இயக்குனருக்கு தான் சிறந்த இயக்குனர் விருது அளிக்கப்படும். கயல், சுந்தரி இரு தொடர்களும் மாறி மாறி நம்பர் 1 இடத்தை பெற்று வருவதால் இரு இயக்குனருக்கும் வழங்கப்பட்டதாக தொலைக்காட்சி நண்பர் ஒருவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

சிறந்த குணச்சித்திர நடிகை (Best Supporting Actress):
பொதுவாக இரண்டாவது நடிகை என்றால் நெகடிவ் கேரக்டர் ஆகா தான் இருக்கும். ஆனால் சுந்தரி தொடர் விதிவிலக்கு. அதினாலேயே, இவருக்கும் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. இவர் அதற்காக சிறந்த குணச்சித்திர நடிகை விருதை பெற்றார்.  
shreegopika



சிறந்த டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ( Best Dubbing Artist ):
சிறந்த டப்பிங் ஆர்ட்டிஸ்ட் (பெண்) விருதை லக்சனா அவர்கள், கேப்ரியல்லா-க்கு குரல் அளித்தமைக்கு பெற்றார். இவர் சுந்தரி மட்டுமல்லாது பாரதி கண்ணம்மா மற்றும் பல தொடர்கள் நடிகைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார்.
tamil dubbing artists


மற்றும் பல தொழில்நுட்ப விருதுகளையும் சுந்தரி தொடர் குவித்துள்ளது. மொத்தமாக சுந்தரி குவித்த விருதுகள் பின்வருமாறு;

1. சிறந்த நெடுந்தொடர்/ Favorite Serial  (சுந்தரி)
2. சிறந்த விருப்பமான நடிகை / Favorite Heroine (Gabriella)
3. சிறந்த இயக்குனர் / Best Director (Azhagar)
4. சிறந்த பண் முக நாயகன் / (Jishnu Menon)
5. சிறந்த குணச்சித்திர நடிகை / Best Supporting Actor (F)- (Shreegopika)
6. சிறந்த தந்தை கதாபாத்திரம்/ Best Father Role (Manohar)
7. சிறந்த பாட்டி கதாபாத்திரம் /Best Grandma Role (PR. Varalakshmi)
8. சிறந்த ஒளிப்பதிவு /Best Cinematography (Murugan)
9. சிறந்த வசனம் 
10. சிறந்த திரைக்கதை / Best Screenplay (Radha krishnan)
11. சிறந்த டப்பிங் கலைஞர் (ஆண் )/ Best Dubbing Artist (M)-(Vignesh)
12. சிறந்த டப்பிங் கலைஞர் (பெண்)/ Best Dubbing Artist (F)- (lakshana)
13. சிறந்த குழந்தை நட்சத்திரம் /Best Child Artist (Prithika)

                    
        

Comments